Manjal Megam – மஞ்சள் மேகம்.. (Tamil Version)

In Stock

207.00

தமிழ்நாட்டோட ஒரு கஷ்டமான காலகட்டம் அது!! நிலையற்ற அரசியல் கட்சிகள்,ஆட்சிக் கலைப்பு,அவசர நிலைப் பிரகடனம், வறட்சி, வேலையில்லாத் திண்டாட்டம், இந்தித் திணிப்பு அப்படி,இப்படின்னு ஏகப்பட்ட பிரச்சனைகள்!

இது போதாதுன்னு நம்ம ஊர் ஒட்டு மொத்த ட்ரான்சிஸ்டர்களிலும் தமிழ்ப் பாட்டுக்குப் பஞ்சமாகிப் போய் ஊட்டி மலையும்,கன்னியாகுமரிக் கடலும் ஆர்.டி.பர்மனோட (Ofcourse, He is king of 1970’s!) ஹிந்திப் பாடல்களை மட்டுமே எதிரொலிச்சிட்டிருந்த அவலநிலை வேறு!

திடுதிப்புன்னு “என் மச்சான…..”-ன்னு கூவிக்கிட்டே இளையராஜான்னு ஒருத்தர் வர்றார்! தட்ஸ் இட்!! அதோட எல்லாமே மாறிடுச்சு! இசையைப் பத்தின நம்ம ரசனைகளுக்கெல்லாம் வேறு ஒரு பரிமாணம் கொடுத்து வேற லெவல்-க்குக் கொண்டு போன பெருமையோட ராஜாதிராஜாவா.. அடுத்து வந்த பல தலைமுறையினர் காதுக்குள்ளயும் சிம்மாசனம் போட்டு மனுஷன் உட்கார்ந்துடுறார்!

பெல் பாட்டம்ஸ்,டைட் ஷர்ட், ஸ்டெப் கட்டோட பசங்க ஒரு பக்கம்! ரெட்டை ஜடையோட சேலை,தாவணி, சைட் ரோஸ்,மிடி,மேக்ஸி,சல்வாரோட பொண்ணுங்க ஒரு பக்கம்!

நம்ம குட்டி சுவர் பாய்ஸ் எல்லாம்‘ஏ..ஆத்தா.. ஆத்தோரமா வாரியா’-ன்னு தான் பொண்ணுங்களைப் பார்த்து பாடியிருப்பாங்க! இல்லையா?? “செனோரீட்டா ஐ லவ் யூ!”-ன்னு தான் ப்ரபோசல்ஸ் எல்லாம் நடந்திருக்கும்! ‘கூடையில கருவாடு,கொண்டையில பூக்காடு தான் யூத் ஆந்தம்-ஆ இருந்திருக்கும்!

பகல் நிலவு + இதயக் கோவிலோட உள்ள வர்ற மணிரத்னம், “என்னோடு பாட்டு பாடுங்கள், எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்’-ன்னு மைக் பிடிச்சு ட்ரெண்ட் செட் பண்ணின மைக் மோகன்.. இவங்கள்லாம் எஸ்.பி.பி, இளையராஜாவோட கையைக் கோர்த்துக்கிட்டு எல்லார் மனசைக் கொள்ளையடிச்ச காலம் அது!

இன்னும் ஒருத்தர் இருக்கார்! டி.ராஜேந்தர்! ஆழமான கடலுக்குள்ள மூச்சுத் திணற மூழ்கிப் போற மாதிரி இந்த மனுஷன் படத்துல வர்ற காதல் தோல்வி ஏற்படுத்துற தாக்கம் இருக்கே..!! ம்ஹ்ம்ம்ம் சான்சே இல்ல! இவருக்கப்புறம் காதல் தோல்வின்ற பேர்ல நம்ம நெஞ்சைத் தட்ட வந்த எந்த விரல்களுக்கும் நாம அந்த உரிமையைக் கொடுக்கவேயில்லை!

இது குழந்தை பாடும் தாலாட்டு, வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது, வசந்தம் பாடி வர வைகை ஓடி வர, வைகைக்கரை காற்றே நில்லு ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… இவர் பேரைக் கேட்டதும் இந்தப் பாட்டெல்லாம் பேக்-க்ரவ்ண்ட்ல வந்தா.. அதுக்கு நான் பொறுப்பில்ல!!

எல்லாத்துக்கும் மேல ஒருத்தர் இருக்கார்! ஒரு அழகன்! விழி அழகன், மொழி அழகன்-ன்னு புதுசு,புதுசா பேரு வைக்கலாம்! தி ஒன் அண்ட் ஒன்லி கமலஹாசன்!

உலகத்துக் காதலன்-கள் எல்லாம் கமலஹாசன் மாதிரி காதலிச்சா என்ன?, ஜெர்மனியின் செந்தேன் மலரே சாங்-ல‘பூஞ்சோலையே பெண்ணானதோ, இரு பொன் வண்டுகள் கண்ணானதோ’-ன்னு சொல்லிட்டு.. லைட் ஸ்மைலோட ஒரு பார்வை பார்ப்பாரு மனுஷன்!! மூக்குக் கண்ணாடிக்குள்ள தெரியுற அந்த முட்டைக் கண்ணுல தேங்கி நிற்குற அத்தனைக் காதலையும்.. வர்ணிக்க.. தமிழ் மொழி அவர் முன்னாடி மண்டி தான் போடனும்!!

“வெள்ளை நிறத்தொரு பூனை என் வீட்டில் வளருது கண்டீர்”-ன்னு கணீர்க்குரல்ல ஆக்ரோஷமா கவிதை பேசறதாகட்டும்! ஸ்ரீதேவியோட சேர்ந்து.. தொடையைத் தட்டி சந்தம் பாடி “மயக்கம் தந்தது யார்… தமிழோ.. அமுதோ.. கவியோ..” –ன்னு கொடுக்குற எக்ஸ்ப்ரஷன் ஆகட்டும்! கொஞ்சமா தலை முடி, தாடி,மீசை, கழுத்துல கருப்புக் கயிறோட வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்ல ‘சத்யா’-ன்னு போட்ட கெட்-அப் ஆகட்டும்…. கமல்ஹாசன்,கமல்ஹாசன்,கமல்ஹாசன்… காதலிக்கிறேன்! நிறைய நிறைய.. உங்களைக் காதலிக்கிறேன்!!

“பருவமே புதிய பாடல் பாடு..”, “இளையநிலா பொழிகிறதே” “பனி விழும் இரவு, வா வெண்ணிலா, அந்த மழைப் பொழிகிறது, பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு, சீர் கொண்டு வா வெண் மேகமே, விழியிலே மணி விழியிலே, வானுயர்ந்த சோலையிலே,ஓ வசந்த ராஜா……. எஸ்.பி.பி இல்லாம ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியுமா நம்மால?????

ராஜராஜ சோழன் நான், என் இனிய பொன் நிலாவே, பூங்காற்று புதிரானது, நீ பாதி நான் பாதி கண்ணே, சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி…… யேசுதாஸ் குரலோட.. எத்தனைத் தூக்கமில்லா இரவுகளைக் கடந்திருப்போம்!

இளையராஜாவோட விரல் இடுக்கு வழியா.. தொலைஞ்சு போய்.. எஸ்.பி,பியோட தொண்டைக் குழியில் ஐக்கியமாகி.. அந்த காலகட்டத்தை உணர்ந்து, வாழ்ந்து.. அங்கேயே கரைஞ்சு போய்.. சிற்றின்பம், பேரின்பத்தையெல்லாம் கடந்த ஒரு ராஜ இன்பத்தை அனுபவிச்ச நம்ம எல்லாரோட ஒரே கற்பனை.. 80ஸ்-ல வாழ்ந்திருந்தா எப்படியிருந்திருக்கும்????

Buy Now

Worth: INR 207.00

தமிழ்நாட்டோட ஒரு கஷ்டமான காலகட்டம் அது!! நிலையற்ற அரசியல் கட்சிகள்,ஆட்சிக் கலைப்பு,அவசர நிலைப் பிரகடனம், வறட்சி, வேலையில்லாத் திண்டாட்டம், இந்தித் திணிப்பு அப்படி,இப்படின்னு ஏகப்பட்ட பிரச்சனைகள்!

இது போதாதுன்னு நம்ம ஊர் ஒட்டு மொத்த ட்ரான்சிஸ்டர்களிலும் தமிழ்ப் பாட்டுக்குப் பஞ்சமாகிப் போய் ஊட்டி மலையும்,கன்னியாகுமரிக் கடலும் ஆர்.டி.பர்மனோட (Ofcourse, He’s king of 1970’s!) ஹிந்திப் பாடல்களை மட்டுமே எதிரொலிச்சிட்டிருந்த அவலநிலை வேறு!

Back to Top